அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வேற்றுக்கிரக வாசிகளால் தன் திருமண வாழ்க்கையையும் பணியையும் இழந்ததாக கூறியிருக்கிறார்.
அமெரிக்க நாட்டில் பொதுவாகவே வேற்றுக்கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் தொடர்பில் அதிகமான கதைகள் கூறப்படும். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த, Steve Colbern என்ற நபர் தன்னை பல தடவை வேற்று கிரகவாசிகள் கடத்திச்சென்றதாக கூறியிருக்கிறார். இவர் இது குறித்து கூறியிருப்பதாவது, “எங்கள் வீட்டின் தோட்டத்திற்கு, ஒரு பறக்கும் தட்டு வந்தது, அதிலிருந்து பச்சை நிற ஒளி தோன்றி, என்னை இழுத்து சென்றது,
அதன்பின்பு, வேற்றுக்கிரக வாசிகள் என்னை ஆய்வகம் போல இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று, ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர்” என்று கூறியுள்ளார். மேலும், ஒரு நீளமான கருவியை வைத்து, என் கையில் ஒரு நானோ சிப்பை பொருத்தினார்கள்.
அந்த நிகழ்விற்கு பிறகு, என் வாழ்க்கை முழுவதையும் வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக அர்ப்பணித்துவிட்டேன். ஆனால் என் மனைவிக்கு இந்த ஆராய்ச்சியில் நான் ஈடுபடுவதில் விருப்பம் இல்லாததால், என்னை விவாகரத்து செய்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, என் உடலில் பொருத்தப்பட்டிருந்த நானோ சிப் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதற்காக, தான் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்த கருவிகளை பயன்படுத்தியதற்காக, அந்நிறுவனம் தன்னை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.