Categories
உலக செய்திகள்

“அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கனும்!”….. பால் வாங்கப்போனவர் கோடீஸ்வரரான சம்பவம்….!!

அமெரிக்காவில் ஒரு நபர் பால் வாங்க கடைக்கு சென்ற நிலையில் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.

அமெரிக்காவில் வர்ஜினியா என்னும் பகுதியில் இருக்கும் வடக்கு செஸ்டர்ஃபீல்டை சேர்ந்த டென்னிஸ் வில்லோபி என்ற நபர் தன் பிள்ளைகளுக்கு சாக்லேட் பால் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக லாட்டரி சீட்டை பார்த்தவர், அதை வாங்கி விட்டு வந்திருக்கிறார்.

அந்த லாட்டரி அவரின் தலையெழுத்தையே மாற்றியமைத்து விட்டது. அவருக்கு, 1,000,000 பிளாட்டினம் ஜாக்பாட் தொகை பரிசாக விழுந்திருக்கிறது. அதாவது இந்த லாட்டரி விளையாட்டிலேயே அதிகமான சிறப்புப் பரிசை பெற்றவர் இவர்தான். இவ்வளவு தொகை பரிசை வென்ற இரண்டாம் அதிஷ்டசாலியாக டென்னிஸ் உள்ளார். இதில் வெற்றி வாய்ப்பு என்பது 1,632,000-ல் 1 தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |