Categories
உலக செய்திகள்

புடினை கொன்றால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்… அமெரிக்க எம்பி அதிரடி…!!!

அமெரிக்காவின் எம்பி, புரூட்டஸ், ஜூலியஸ் சீசரை கொன்றதை குறிப்பிட்டு ரஷ்யாவில் புரூட்டஸ் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செனட்சபையின் மூத்த உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டுமெனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, இந்த பிரச்சனை எப்போது தீரும்? ரஷ்ய நாட்டில் இருக்கும் யாராவது ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின்பு தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது, இந்த பிரச்சனையை தீர்க்க ரஷ்ய மக்களால் தான் முடியும். கூறுவது எளிது செய்வது தான் கடினம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரோமானிய பேரரசின் அரசரான ஜூலியஸ் சீசரை, புரூட்டஸ் கொன்றதை குறிப்பிட்டு, ரஷ்யாவில் புரூட்டஸ் இருக்கிறாரா? என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |