Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவிலிருந்து வெளியேறு”.. இளவரசர் ஹரியை எதிர்க்கும் அமெரிக்க மக்கள்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க அரசியல் சாசனம் தொடர்பில் கூறிய கருத்து அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசர் ஹரி அமெரிக்காவில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்காவின் அரசியல் சாசனத்தின் முதல் சட்டத் திருத்தம் தொடர்பில் அதிகமாக பேச வேண்டியிருக்கிறது. ஆனால் அது எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அது பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் முதல் சட்டத் திருத்தம் ஆரம்பித்த இடத்திற்கு நான் செல்ல நினைக்கவில்லை. ஏனெனில் அது பெரிய விஷயம். நான் அமெரிக்காவிற்கு சிறிது காலத்திற்கு முன்பு தான் வந்தேன். எனினும் அனைத்து சட்டங்களிலும் ஓட்டைகள் உள்ளது. எனவே சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவதை காட்டிலும், அதிலிருக்கும் ஓட்டைகளை வைத்து தப்பிப்பதற்கு தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அமெரிக்கர்களில் ஒருவர், ஹரிக்கு அரசியல் சாசனம் குறித்து ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பலாம் என்று கூறியிருக்கிறார். மற்றுமொருவர் “அமெரிக்காவிலிருந்து வெளியேறு” என்று கூறிவிட்டார். இதனிடையே பிரிட்டனில் Nigel Farage குறிப்பிட்ட ட்விட்டில் இன்னும் சில காலத்திற்குள் இருநாடுகளுக்கும் ஹரி வேண்டாதவர் ஆகப்போகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |