Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்களுக்காக தற்காலிக தங்குமிடம்!”.. அமெரிக்க மக்களின் மோசமான கருத்துக்களால் அதிர்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து மீட்கப்பட்டிருக்கும், அந்நாட்டு மக்களுக்காக ஜெர்மனியில் தற்காலிகமாக தங்குமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜெர்மன் நாட்டில், அமெரிக்கா அமைத்திருக்கும் Ramstein Air Base என்ற விமான தளத்தை தான் ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து தற்காலிக தங்கும் இடமாக மாற்றி வருகிறார்கள். இதற்காக, மக்கள் பலரும் டாய்லெட் பேப்பர், கால்பந்து போன்ற பல பொருட்களை நன்கொடையாக கொடுத்து வருகிறார்கள்.

இந்த விமான தளத்தில், ஐந்தாயிரம் மக்களை முதலில் தங்க வைக்கவுள்ளனர். அதன் பின்பு அவர்களை நிரந்தர இடத்திற்கு மாற்றுவோம் என்று பெர்லினில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்த செய்தி வெளியானதும், அமெரிக்க மக்கள் மோசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதாவது, அந்த மக்களை அமெரிக்காவிற்கு அழைக்காதீர்கள், நம் நாட்டில் இருக்கும் நகர்களையும், காபூல் போல் மாற்ற வேண்டுமா என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர்,  அமெரிக்கா, அவர்களை வரவேற்காது, ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தங்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

இது போன்று, பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதன் மூலம், ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் அமெரிக்க மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது? என்று தெரிந்துவிட்டது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |