அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை எட்டியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் கண்டறியப்பட்டது. தற்போது உலகிலுள்ள 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்தக் கொடிய வைரஸ் மிகப்பெரிய அளவில் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,280க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.67 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சமாக உயர்ந்துள்ளது.