Categories
உலக செய்திகள்

காரில் நடந்த கொள்ளை சம்பவம்…. ஓட்டுனரை சுட்ட சிறுவன்…. பலியான இந்தியர்….!!

காரினுள்ளே கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களில் சிறுவன் ஒருவன் ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 வயதான குலதீப் சிங் என்பவர் நியூயார்க் மாகாணத்தில் uber கார் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 10 மணியளவில் 8வது அவென்யூ மற்றும் வெஸ்ட் 131வது தெரு வழியாக பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது காரில் இருந்த 15 வயது சிறுவன் குலதீப் சிங்கை தலையில் சுட்டுள்ளான். மேலும் காரில் இருந்த மற்றொரு நபர் அந்த 15 வயது சிறுவனை திருப்பி சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மர்ம நபர் மற்றும் 15 வயது சிறுவன் இருவரும் குலதீப் சிங் காரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் குலதீப் சிங் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதில் ஈடுப்பட்ட மற்றொரு நபர் தலைமறைவாகியுள்ளார். குறிப்பாக இந்த சம்பத்தில் போலீசார் எவரையும் கைது செய்யவில்லை.

Categories

Tech |