Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. அரசு எடுத்த அதிரடி முடிவு…. வெளியான சூப்பர் தகவல்….!!!

அமெரிக்காவில் கிரீன் கார்டுகளுக்கான கட்டுபாடுகளை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உள்ளவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு மட்டுமே அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக கிரீன் கார்டு கொடுக்கப்படும். இதற்கிடையில் ஒவ்வொரு நாட்டில் இருந்து வருவோருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும். இருப்பினும் இதற்காக பல்லாயிரம் கணக்கானோர் விண்ணப்பித்து அமெரிக்காவில் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை வரம்பை அகற்ற வழி வகுக்கும் மசோதாவை நீதித்துறைகான அமெரிக்க எம்.பிக்கள் குழு நிறைவேற்றியுள்ளது. மேலும் அக்குழுவின் உறுப்பினர் ஜோ லாப்கிரேன் வெளிநாடுகளிலிருந்து வரும் திறமையானவர்களை தக்க வைத்துக்கொள்ளவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான ஒப்புதலை விரைவில் அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மசோதாவின் இந்த முடிவால் அமெரிக்காவில் கிரீன் காடுகளுக்காக பல ஆண்டுகாலமாக காத்திருக்கும் இந்தியர்களும், சீனர்களும் அதிக அளவில் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |