அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலை வழக்கு அதிரடி திருப்பத்தை உண்டாக்கியுள்ளது.
நியூயார்க்கை சேர்ந்த Gabby Petito (22) மற்றும் ப்ளோரிடாவை சேர்ந்த Brian Laundrie (23) ஆகிய காதல் தம்பதியர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி வேனில் நீண்ட சுற்றுலா புறப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி இவர்கள் இடையே சண்டை ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தன் காதலியின்றி Laundrie மட்டும் தன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார். இது குறித்து போலீசார் விசாரித்த போது, Laundrieயும் அவரது பெற்றோரும் சரியான பதில் அளிக்கவில்லை.
எனவே தன் பெற்றோருக்கு கடைசியாக குறுஞ்செய்தி அனுப்பிய Grand Teton தேசிய பூங்காவுக்கு சென்ற போலீசார், நீண்ட தேடுதலுக்கு பின் Gabby-ஐ சடலமாக மீட்டனர். பின்னர் செப்டம்பர் 21 அன்று வெளியான உடற்கூறாய்வில் Gabby கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசாரின் கவனம் Laundrie மீது திரும்ப, அவர் தலைமறைவாகினார். இதன்பின் செப்டம்பர் 14 ஆம் தேதி தனது மகனை கடைசியாக பார்த்ததாக அவரது பெற்றோர் கூற, போலீசார் Laundrie-ஐ வலைவீசி தேடினர்.
இந்த நிலையில் முக்கிய திருப்பமாக Laundrie ப்ளோரிடாவின் Carlton Reserve செல்வது வழக்கம், ஒருவேளை அங்கு ஒளிந்திருக்கலாம் என அவரது பெற்றோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி நேற்று போலீசார் நடத்திய தேடுதலில் Laundrie-இன் பை, மொபைல் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின. இந்த பகுதியின் சற்று தொலைவில் ஒரு சடலம் கிடைத்தது.
மேலும் அது Laundrie உடலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும் உடற்கூறாய்வு முடிவுக்காக போலீசார் காத்திருக்க, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் Gabby-இன் மரணம் மர்மமான நிலையில், அவரைக் கொன்றது Laundrieயா..? அவர் எதற்காக கொல்லப்பட்டார்..? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே முடிவுக்கு வந்துள்ளது.