மருத்துவ இதழ் ஒன்று கர்ப்பிணிப்பெண்களை வைத்து ஆராய்ச்சி நடத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வருகின்றனர். இதுவரை இல்லாத புதுவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்கின்றனர். அதாவது கொரோனா வைரஸின் மரபணுவில் உள்ள RNA விலிருந்து MRNA நகலை பிரித்து அதன் மூலம் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தும் பொழுது தாய்மார்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் இயல்பாகவே உருவாகிவிடுகிறது. இந்த ஆய்வினை அமெரிக்காவின் பிரபல மருத்துவ இதழ் ஒன்று நடத்தியுள்ளது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 36 கர்ப்பிணிப்பெண்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
குறிப்பாக இந்த ஆய்வின் மூலம் தாய்க்கு மட்டுமின்றி சேய்க்கும் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு நோய் எதிர்ப்புத்திறன் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் இதுவரை அமெரிக்காவில் 30% கர்ப்பிணிகள் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.