அமெரிக்காவின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கொரோனாவின் தற்போதய நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 40, 428 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பானது சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தை விட மிகக் குறைவானது தான். மேலும் அந்த அறிக்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 க்கு கீழே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை அங்கு வசிக்கும் குடிமக்களில் 10 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வரும் மே மாதத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.