அமெரிக்காவில் நாய்க்குட்டியை சித்ரவதை செய்து கொன்ற நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Riverside நகரத்தில் ஏஞ்சல் ரமோஸ் கோரல்ஸ் என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு நாள் முழுக்க கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ள நிலையில், இந்த வாலிபர் பிறந்து 4 மாதங்களே ஆன கனேலோ என்ற நாய்க்குட்டியை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டார்.
பின்னர், அந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் செய்த புகார்கள் பேரில் அமெரிக்க சட்ட அலுவலகம் எடுத்த நடவடிக்கையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பப்டார். மேலும், நாய் தனது கட்டுப்பாட்டை இழந்த ஆத்திரத்தில் நாயை சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு, அவரது ஆடைகளில் நாயின் ரத்தக்கறை படிந்திருந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, அவர் நாயை சித்ரவதை செய்து கொன்றது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இந்த குற்றத்துக்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரிவர்சைடு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது, ஏஞ்சல் கோரல்ஸை அங்குள்ள மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.