Categories
உலக செய்திகள்

“அவசரக்கால தடுப்பூசி”… ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் single- doseக்கு அங்கீகாரம்… அமெரிக்காவின் முக்கிய முடிவு….!!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள single- dose என்ற தடுப்பு மருந்தை அவசரக்கால தடுப்பூசியாக பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனமான FDA  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது குறித்து பல கட்டங்களாக ஆய்வு நடத்தியது. அதற்குப் பிறகு இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதுள்ளவர்களுக்கும் செலுத்தலாம் என்று கடந்த சனிக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாடெர்னா மற்றும் ஃபைசர் என்ற இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அமெரிக்காவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள மூன்றாவது தடுப்பூசியாகும்.

தற்போது வரை அமெரிக்காவில் வசிக்கும் குடிமக்களில் 65 மில்லியன் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு விட்டது. இந்நிலையில் அடுத்த வாரத்திலிருந்து ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான single- dose என்ற தடுப்பூசியையும் பொது மக்களுக்கு செலுத்துவதற்கு அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |