Categories
உலக செய்திகள்

“இதுவும் அவசரக்கால தடுப்பூசி தான்”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு… அங்கீகாரம் வழங்கிய அமெரிக்கா…!!

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட்  ஜான்சன் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் என்ற தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் FDA அங்கீகாரம் வழங்க  முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக சுமார் 44 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்க்கும் வகையில் 66% பயனுடையதாகவும், அந்த நோயின் பாதிப்புகளை தடுப்பதில் 87% பயனுடையதாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே பைசர்  மற்றும் மாடர்னா என்ற 2 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன்  நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும்,  அவசரகால தடுப்பூசியாக அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை FDA ஆலோசனைக் குழு ஒன்றுகூடி முடிவெடுத்த பிறகு இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளது. இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு மார்ச் 4-ஆம் தேதி முதல் “அவசரகால பயன்பாட்டு தடுப்பூசி” என்ற அங்கீகாரம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |