பள்ளி வாகன ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநரான 72 வயது Richard Lenhart என்பவர் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து Richardயை கத்தியால் குத்தியுள்ளான். மேலும் இச்சம்பவத்தின் போது பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அதனால் பேருந்தானது நிலை தடுமாறி தடுப்பு வேலியில் மோதியுள்ளது.
ஆனால் பேருந்து மோதியதில் எந்தவொரு குழந்தைகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிலும் சம்பவ இடத்திலேயே தாக்குதல் நடத்தியவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தை நேரில் கண்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் காத்திருந்து அவர்கள் பெற்றோர் வந்தவுடன் ஒப்படைத்துள்ளனர்.
குறிப்பாக மாணவர்களுக்கு இதனால் ஏதேனும் உளவியல் தொடர்பாக ஆலோசனை தேவைப்பட்டால் அதனை அளிக்கவும் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளது. அதிலும் தாக்குதல் நடத்தப்பட்ட பேருந்து வரும் திங்கட்கிழமை அன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர்.