காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸின் வடகிழக்கு பகுதியில் காட்டுத்தீயானது பற்றி கொழுந்துவிட்டு எரிகிறது. மேலும் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து காட்டுத்தீயானது துவக்கத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காட்டுத்தீ பரவியுள்ள இடங்களில் இருக்கும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். அதிலும் காட்டுத்தீயானது எவ்வாறு பரவியது என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.