தண்டவாளத்தில் மயங்கி கிடந்தவரை போலீஸ் அதிகாரி காப்பாற்றிய சம்பவமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள Bronx என்ற நகரில் சுரங்க ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட NYPD அதிகாரி ஒருவர் உடனே அவரை தண்டவாளத்தில் இருந்து தூக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் பயணியை தனியாக தூக்க முடியவில்லை. இதைக் கண்ட மற்றொரு பயணியும் தண்டவாளத்தில் இறங்கி இருவரும் சேர்ந்து அவரை தூக்கியுள்ளனர்.
NYPD cops help New Yorkers at any cost!
When a sick strap hanger lost consciousness and fell on the subway tracks in the Bronx, @NYPDTransit officers didn’t hesitate for a moment to put his safety ahead of their own. We’re also grateful to the Good Samaritan who bravely helped. pic.twitter.com/m0kmylDUJJ
— NYPD NEWS (@NYPDnews) August 19, 2021
இன்னும் ரயில் நிலையத்திற்குள் ரயில் வர சில நொடிகளே இருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து பயணியை தூக்கி நடைமேடையில் வைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக சில நொடிகளிலேயே ரயில் வந்துள்ளது.