தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை அமெரிக்கா சுகாதார துறை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீவிர தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து அமெரிக்காவில் மாடர்னா, பைசர், பயோடெக், ஜான்சன்& ஜான்சன் போன்ற தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுவரை மொத்தமாக போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது 34,49,28,514 ஆகும்.
இதனை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 29 ஆம் தேதி வெளியான செய்தியின் படி மொத்தம் 34,40,71,595 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 19,05,09,183 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 16,41,84,080 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அமெரிக்க சுகாதார துறை வெளியிட்டுள்ளது.