Categories
உலக செய்திகள்

தந்தையின் இறுதி சடங்கு…. மகளின் மோசமான செயல்…. பிரபல நாட்டில் குவியும் கண்டனம்….!!

அமெரிக்காவில் தந்தையின் சவப்பெட்டி முன் இளம்பெண் செய்த செயல் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் போர் வீரர் ஒருவரின் இறுதி சடங்கில், அவரது மகள் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இறுதி சடங்கில் அவரது மகள் புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பெயர் வெளியிடப்படாத இளம்பெண், சவப்பெட்டியில் வைத்திருந்த தந்தையின் உடலுக்கு முன் கவர்ச்சியான உடை அணிந்து விதவிதமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இதில் புகைப்படத்தின் பின்னணியில், தந்தையின் உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்த அமெரிக்க கொடியும் தெரிகிறது.

இதனால் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து, தன் தந்தையின் இறுதி சடங்கில் இப்படியா செய்வது..? இப்படியா ஒரு பெண் தன் தந்தையின் இறுதி சடங்கில் உடையணிவார்..? பிரபலமாக செய்யும் செயலா இது..? என்று கடுமையாக அவரை விமர்சித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |