அமெரிக்காவில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டின் அட்லாண்டா நகரில் உள்ள சாம்பிலீ கவுன்டி என்ற பகுதியில் தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
இந்த நிலையில் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். மேலும் தீயை அணைக்கும் பணியில் 15 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் விமான விபத்திற்கான காரணம் என்ன..? என்பது குறித்து தகவல் இதுவரை தெரியவில்லை. இதனால் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்திற்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது.