அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் மர்ம நபர்கள் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நடந்துள்ளது. அதுமட்டுமன்றி நகரின் வேறு இரண்டு இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஒரே இரவில் 4 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்ம நபர்கள் நடத்திய ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இடையில் 60 முதல் 90 நிமிடங்கள் வரை இடைவெளி இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதுபற்றி சின்சினாட்டி நகரின் காவல் தலைமை அதிகாரி கூறுகையில் பவுல் நெடிகாட் கூறும்போது, ” வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு மிகவும் கொடூரமானது. அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் அனைவரும் நிச்சயமாக பிடிபடுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்தே டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.