Categories
உலக செய்திகள்

‘உயிரிழப்பு குறைகிறது’…. மாத்திரையை உட்கொண்டவர்களிடம் ஆய்வு…. வேண்டுகோள் விடுத்துள்ள பைசர் நிறுவனம்….!!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாத்திரையை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிரான மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘மோல்நுபிராவிர்’ என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் உயிரிழப்புகளையும் 50% குறைப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத்திரைக்கு முதன் முதலாக உலகிலேயே பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய மாத்திரை ஒன்றை அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மாத்திரையானது பிரிட்டனில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஆண்டிவைரல் மாத்திரையை விட அதிக அளவு செயல்திறன் உடையது என்று கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் இரு நிறுவனங்களும் தங்களின் பரிசோதனைகளின் தரவுகளை முழுமையாக வெளியிடவில்லை.

அதே சமயத்தில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தொற்று சிகிச்சைக்கான மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான FDAவிடம் சமர்ப்பிக்கவுள்ளது. இதே போன்று சர்வதேச மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணயம் அமைப்பும்  அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவின் FDA அமைப்பு சில வாரங்களில் அல்லது மாதங்களில் பைசர் நிறுவனத்தின் மாத்திரையை அங்கீகாரம் செய்வது தொடர்பான தீர்மானத்தை விரைவில் எடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள ஆண்டிவைரல் மாத்திரையுடன் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரையை உட்கொண்ட 89% பேருக்கு உயிரிழப்பு அபாயம் குறைந்துள்ளது.

மேலும் இந்த மாத்திரையை உட்கொண்டவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாத்திரையை உட்கொண்ட 775 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தியவர்கள், இலேசான முதல் மிதமான கொரோனா தொற்று அறிகுறி கொண்டவர்கள், நீரழிவு நோய், இதய நோய் பாதிப்பு உடையவர்கள் ஆவர்.

Categories

Tech |