வனப்பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயினால் 42,000த்திற்கும் மேலான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்
அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் எல்டொரோடா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுத்தீயானது பற்றி எரிந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். அதிலும் காட்டுத்தீயானது கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை வனப்பகுதியில் சுமார் 1,17,௦௦௦ ஏக்கர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காட்டுத்தீயினால் 42,௦௦௦த்திற்கும் மேலான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.