Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு மட்டும் ஏன்….? தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எல்லைகள்…. வெள்ளைமாளிகை அறிக்கை….!!

கனடா மற்றும் மெக்சிகோ மீதான பயண விதிமுறைகளை தொடர்ந்து அமெரிக்கா நீட்டித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ மீது கடுமையான பயண விதிமுறைகளை கடந்த மார்ச் 2020 இல் அமெரிக்கா அமல்படுத்தியது. மேலும் அந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்தது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியவுடன் கனடா கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தேவையற்ற பயணங்களாக இருப்பினும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்கர்களை அந்நாட்டிற்குள் நுழைய அனுமதித்தது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளைமாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் “இந்தியா பாகிஸ்தான், சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண விதிமுறைகளை நீக்கியது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் சில விதிமுறைகளுக்கு மட்டும் உட்படுத்தப்பட்டு அமெரிக்காவிற்குள் நுழையலாம்” என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அதன் சர்வதேச எல்லைகளை பகிரும் நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ மீதான பயண விதிமுறைகளை மட்டும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Categories

Tech |