அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராபர்ட் ட்ரம்ப்பின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இது தொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானாலும், அவருடைய உடல் நலக்கோளாறு குறித்த தெளிவான விபரங்கள் இடம் பெறவில்லை. இதற்கிடையில் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்த டொனால்ட் ட்ரம்ப், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராபர்ட் ட்ரம்ப்புக்கு வயது 71, அவரது தமது இளைய சகோதரர் மட்டுமல்ல ஒரு மிக சிறந்த நண்பர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது இழப்பு தமக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.