கொரோனா பரவல் அதிகமாக காணபடுவதால் அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் புதிய வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
சீனாவிலிருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் படிப்படியாக உருவெடுத்து உலக நாடு முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தியது. தற்போது சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தீவிரமாக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷ்யாவும் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி அறிமுகப்படுத்தியது. மத்திய அரசும் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியது. அந்தவகையில் தற்போது அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரே டோஸ் செலுத்தக்கூடிய தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது.
மேலும் இந்தியாவில் தற்போது 2-ம் கட்ட தடுப்பூசி பயன்படுத்தி வருவதால் அதன்பிறகு பயன்படுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3 வது கட்ட பயன்பாட்டிற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 3-வது கட்ட பரிசோதனை மேற்கொள்வதுடன் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
ஆகையால் தற்போது கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தடுப்பூசியின் தேவையும் அதிகரித்து வருவதால் அமெரிக்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்க்கு ஒப்புதல் கூடிய விரைவில் வழங்கிவிடும் என்று எதிர்பார்க்கபடுவதாக கூறியுள்ளனர்.