Categories
உலக செய்திகள்

அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு…. தாக்குதல் நடத்திய மர்ம நபர் தற்கொலை…. பரபரப்பு….

அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பெட்எக்ஸ் என்ற பன்னாட்டு லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் எப்பொழுதும் போல் பணிகள் நல்ல முறையில் நடந்த கொண்டிருந்தது. அப்பொழுது இரவு நேர பணியாளர்கள்  பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது எவரும் எதிர்பாராத விதமாக மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்த மர்ம நபர் அங்கு பணியாற்றிய பணியாளர்களை கண்மூடித்தனமாக குருவியைப் போல் சுட்டுத் தள்ளினர். ஆகையால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதற்றத்திலும் பயத்திலும் நிறுவனத்திற்குள் அங்கும் இங்குமாக ஓடி தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைத்தனர்.

அப்பொழுதும் இரக்கம் காட்டாத மர்ம நபர் ஒவ்வொருவரையும் சுட்டு தள்ளியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தும்  4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த கோர தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் காயம் அடைந்த நால்வரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அதில் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியவர் குறித்து எதுவும் தெரியாத காரணத்தினால் அதன் பின்னணி என்ன என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |