அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு முறைப் பயணமாக பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் டொனால்டு ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் ட்ரம்பின் சுற்றுப்பயணம் குறித்து இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் அமெரிக்க இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.