விண்வெளிக்கு பயணம் செய்த 4 பேர் கொண்ட குழு மூன்று நாட்கள் பயணத்திற்குப் பிறகு தற்போது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளிக்கு நான்கு பேர் கொண்ட குழு பால்கன்-9 ராக்கெட்டில் பயணம் செய்துள்ளனர். அதாவது இந்த பயண திட்டத்தை உலக செல்வந்தர்களில் ஒருவரான எலன் மஸ்க் தொடங்கியுள்ளார். மேலும் இந்த பயண திட்டத்திற்கு ‘இன்ஸ்பிரேஷன்-4’ என பெயர் வைத்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த திட்டமானது சாதாரண மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் திட்டமாகும். இதனையடுத்து இந்த திட்டத்தின்படி கடந்த 16 ஆம் தேதி சாதாரண மனிதர்கள் நான்கு பேர் கொண்ட குழு பால்கன்-9 விமானத்தில் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் பூமியிலிருந்து 575 கி. மீ உயரத்தில் மூன்று நாட்களாக விண்வெளியில் இருந்துள்ளனர். இதற்கிடையில் அட்லாண்டிக்கில் புளோரிடா என்னும் கடற்கரை அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த கடற்கரையில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட நான்கு பேரும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் அவர்கள் தரையிறங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் எலன் மஸ்க் விண்வெளிக்கு சுற்றுலா சென்று திரும்பியவர்களை பாராட்டியுள்ளார்.