அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் 100 பேர் இறந்துள்ளனர் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க நாட்டின் தென்மேற்கு கென்டகி பகுதியில் பல்வேறு சூறாவளிகள் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதில் 30 சூறாவளி புயல்கள் அந்நாட்டின் அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி போன்ற 6 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கென்டகியில் உள்ள மெழுகுவர்த்தி ஆலை ஒன்று புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஆலையில் 110 நபர்கள் இருந்து உள்ளனர்.
இதன் காரணமாக கென்டகியை சேர்ந்த 50 பேருக்கும் கூடுதலாக உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என்று கவர்னர் ஆண்டி பெஷீர் கூறியுள்ளார். இதனால் உயிரிழப்பு 70 முதல் 100 பேர் வரை இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வாறு இந்த சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதல்களை அடுத்து அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்து சென்றுவிட்டது. அதுமட்டுமின்றி இந்த சூறாவளியால் 3,31,549 பேர் மின் இணைப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே சூறாவளி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், 2.5 கோடி பேர் அச்சுறுத்தலான சூழலில் இருக்கின்றனர்.