Categories
உலக செய்திகள்

“என் கிட்ட வராதே தள்ளி போ”… நள்ளிரவில் கத்திய 2 வயது சிறுமி… சிசிடிவியில் பதிவான கொடூர உருவம்…!!

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு  கேமராவில் கொடூர உருவம் ஒன்று பதிவாகியுள்ளது.  

அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகல்ஸ் என்ற பகுதியில் Tory McKenize என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  அவரது வீட்டிலுள்ள ஒரு அறையில் Tory -ன் 2 வயது பேத்தி Amber-ம் , 7 மாத பேரனும் தூங்கி கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென்று அவரது பேத்தி Amber நடுராத்திரியில் தள்ளிப்போ என் கிட்டே வராதே என்று கத்தியுள்ளார். இதனை கவனித்த Tory குழந்தைகளின் அறையில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தினார்.

பின்னர்  மறுநாள் காலையில் கேமராவில் என்ன பதிவாகி இருந்தது என்று பார்த்தபோது Tory அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். ஏனெனில் அந்த பதிவில்,  தலையில் கூர்மையான கொம்புகளுடனும், கையில் கூர்மையான நீண்ட நகங்களை கொண்ட ஒரு கொடூர உருவம் இருப்பதை அவர் கண்டுள்ளார் . குழந்தைகளின் பெற்றோரிடம் இந்த விஷயத்தை உடனடியாக கூறி 2 குழந்தைகளையும் அவர்களின் அறைக்கு தூங்குவதற்காக  Tory அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோவில் இருக்கும் உருவத்தைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் அந்த உருவத்தைப் பார்த்து முதல் நாள் பயந்த Amber தற்போது பயப்படாமல் அதனை தனது நண்பன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். இந்நிலையில் அந்த உருவத்தை எப்படியாவது தன் வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆவிகளை விரட்டுபவரை அணுகியுள்ளாராம் Tory .

Categories

Tech |