அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின சிறுமி ஒருவரை திடீரென போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் பகுதியில் நேற்று மாலை கத்திக்குத்து நடைபெற்றதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. எனவே தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள் .அதில் 16 வயது கருப்பின சிறுமியை கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையில் போலீசார் எதற்காக சிறுமியை சுட வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த உண்மை வெளிவரவில்லை என்றும் விரிவான விசாரணைக்கு பிறகு உண்மை தெரியவரும் என்று கொலம்பஸ் நகர மேயர் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்கிற ஆப்ரிக்கா அமெரிக்கரை மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் கால் முட்டியை வைத்து கழுத்தில் அழுத்தி கொன்றுள்ளார்.இந்த சம்பவத்தில் டெரெக் சாவினை குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்த அரை மணி நேரத்திற்குள் கருப்பின சிறுமி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிறுமியை போலீசார் சுட்டு கொன்றதை கண்டித்து கொலம்பஸ் பகுதியில் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள போலீஸ் தலைமையகம் மற்றும் போலீஸ் நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.