அமெரிக்காவில் 4 பேர் பயணம் செய்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் ஒற்றை என்ஜின் கொண்ட பைபர் பிஏ-46 என்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையம் மஸ்கோகியிலிருந்து வடக்கு புளோரிடாவில் அமைந்துள்ள வில்லிஸ்டன் நோக்கி சென்றது.
அப்போது ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ராக் வீதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென 5 மணி அளவில் ரேடார் தகவல் தொடர்பு பிடிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி தீவிரமாக்கபட்டது. லிட்டில் ராக் பகுதியின் அருகே வசித்து வந்த மக்கள் விமானம் ஒன்று கீழே விழுந்த சத்தம் கேட்டதாக கூறியுள்ளனர்.
இதனை அறிந்த மீட்புக் குழுவினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. மேலும் சம்பவ இடத்திலேயே விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.