Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் 93 வயது துணை அதிபர் காலமானார்…. இரங்கல் தெரிவிக்கும் அமெரிக்க அரசு….!!!

அமெரிக்காவின் 42-வது துணை அதிபரான வால்டர் மண்டிலி இன்று காலமாகியுள்ளார்.

அமெரிக்காவில் 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்ட்டர் என்பவர் 39 ஆவது அதிபராக பதவி வகித்து வந்தார். அப்பொழுது அமெரிக்காவின் 42 வது துணை அதிபராக வால்டர் மண்டிலி பதவியிலிருந்தார். மேலும் 1993 முதல் 1996 பில் கிளிங்டன என்பவர் அதிபராக இருந்தபோது வால்டர் மண்டிலி  ஜப்பானுக்கு அமெரிக்க தூதராக செயல்பட்டு வந்தார். அவர் அரசியலில் இருந்து கடந்த வருடம் வயது முதிர்வு காரணமாக விலகிவிட்டார்.

தற்போது வால்டர் மண்டிலிக்கு 93 வயது ஆகிவிட்டது . எனவே வயது முதிர்வு காரணத்தினால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் துணை அதிபர் வால்டர் மண்டிலி இந்த சம்பவத்திற்கு அவருடன் பணிபுரிந்த ஜிம்மி கார்ட்டர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போன்ற பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |