Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் உதவி வேண்டாம்-இந்தியா விளக்கம்…!

இந்திய-சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்கா உதவி வேண்டாம் என இந்தியா  மறுத்துள்ளது…!

 

கிழக்கு லடாக் பகுதியின் பான்காங் சோ ஏரியில் சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி முப்படைகளின் தலைமைத் தளபதி தீபன் ராபர்ட், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங், சீன வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தியா-சீனா இரு நாடுகளுக்கிடையேயான மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

இதனை அறிந்த இரு நாட்டுத் தலைவர்களும் எங்களின் எல்லை பிரச்சினைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பெரிடன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார் அந்த உரையாடலில் அவர் கூறியதாவது “இந்த நிலையை கட்டுப்படுத்த ஒரு நாடு தற்போது என்ன வழிமுறையை பின்பற்றுகிறது அதையே பின்பற்றுவோம்” என குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் பாதுகாப்புத்துறை சார்பாக கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் “இரு நாட்டு வளர்ச்சியின் பணி பாதுகாப்பு ராணுவத்தை பலப்படுத்துவதற்காக திட்டங்களை ஆலோசிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |