அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக அதிபர் ஜோ பைடன் துணை சுகாதார செயலாளர் பதவிக்கு திருநங்கையான Dr.Rachel Levine என்பவரை நியமித்தார். இதற்கு குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த நியமனதிற்கான மசோதா புதன்கிழமை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சபையில் 52க்கு 48 என்ற கணக்கில் ஆதரவான வாக்குகள் பெற்று துணை சுகாதார துறை அமைச்சராக Rachel Levine நியமனம் செய்யப்பட்டார்.
இவர் தான் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட முதல் வெளிப்படையான திருநங்கை. மேலும் இவர் பெடரல் அதிகாரியாகவும் திகழ்கின்றார். இதற்கு முன்பு Rachel Levine பென்சில்வேனியாவில் சுகாதாரத் துறை செயலாளராகவும் மாநில மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.