பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்கள் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் மருத்துவர் Jumana Nagarwala வசித்து வருகின்றார். இவர் 7 வயதுடைய ஒன்பது சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. அப்போது பெடரல் நீதிபதி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த விவகாரம் குறித்த நடைமுறையை தடை செய்யும் திட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளார். அதன்பின்பு மிச்சிகன் மருத்துவரான Jumana Nagarwala குற்றமற்றவர் என சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது மருத்துவர் உண்மையான தரவுகளை மூடி மறைப்பதாக கூறப்பட்டு இந்த வழக்கு நீதிமன்றத்தில் மறு விசாரணைக்கு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்த விசாரணையின்போது சட்டத்தரணிகள் கலிபோர்னியா மற்றும் இல்லினாய்ஸில் உள்ள மருத்துவர்களும் பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சையில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளதை நிரூபித்துள்ளார். மேலும் மருத்துவர் நகர்வாலா மற்றும் மருத்துவர் பக்ருதீன் அட்டர் மீது ஆரம்பத்தில் பெண்ணுறுப்பு சிதைப்பு சதி மற்றும் விசாரணைக்கு இடையூறாக இருந்தது ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மருத்துவர் பக்ருதீன் அட்டர் தனது மருத்துவமனையிலேயே மருத்துவர் நகர்வாலாவை பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தற்போது இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மருத்துவர் நகர்வாலா விசாரணைக்கு எதிராக இருந்தது குறித்த குற்றச்சாட்டில் மட்டுமே விசாரணையை எதிர்கொள்கின்றார். இதற்கிடையில் மருத்துவர் நகர்வாலாவும் இன்னும் மூன்று மருத்துவர்களும் இது போன்ற பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சையை ரகசியமாக முன்னெடுக்க தங்கள் சமூக மருத்துவர்களை ஊக்கப்படுத்தியதாகவும் விசாரணை ஏதும் முன்னெடுக்கப்பட்டால் பொய்யான தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்ததாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்ற வாதத்தில் முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மருத்துவர் நகர்வாலா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுமிகள் இருவரின் புகாரின் அடிப்படையில் மருத்துவர் நகர்வாலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் மருத்துவர் நகர்வாலா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தாவூதி பொஹ்ராஸ் இஸ்லாமிய பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்காக ஒரு மத நடைமுறையை மட்டுமே செய்வதாக வாதிட்டுள்ளதாக கூறப்படுகிறது.