காட்டுத்தீயானது வேகமாகப் பரவி வருவதால் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீயானது தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த காட்டுத்தீயானது அருகிலுள்ள நிரா நவாடா மலைப்பகுதி முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த தீவிபத்தில் 50 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் 2 பேர் தீயில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து இந்த காட்டுத்தீயினால் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கலிபோர்னியா பகுதியில் 51000 வீடுகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.