பிரித்தானிய இளவரசர் ஹரி அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் மாளிகைக்கு அருகில் உள்ள கஞ்சா குடோனில் இருந்து வரும் நாற்றத்தை தாங்க முடியாத மக்கள் அந்த நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு கலிபோர்னியாவில் ஒரு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் பிரித்தானியா இளவரசர் ஹரி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவி மேகன் மற்றும் பிள்ளைகளுடன் குடிபுகுந்துள்ளர். இதனையடுத்து இளவரசர் ஹரி அந்த மாளிகை தனக்கு கனவு இல்லமாக இருக்கும் என்று நினைத்து குடிபுகுந்துள்ளார். ஆனால் அந்த மாளிகைக்கு அருகில் ஒரு கஞ்சா குடோன் உள்ளது. அது இளவரசர் ஹரி எதிர்பார்க்காத ஒன்று. இதனைத்தொடர்ந்து பிரித்தானியா இளவரசர் ஹரி குடும்பத்துடன் வசித்து வரும் அந்த மாளிகையிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில்தான் அந்த கஞ்சா குடோன் உள்ளது.
மேலும் அந்த குடோனில் ஒரு கஞ்சா தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த தொழிற்சாலையிலிருந்து வரும் நாற்றத்தை தாங்க முடியாத அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலர் கஞ்சா நிறுவனம் குறித்து புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறியதாவது “கஞ்சா நாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த தகவல் எங்களுக்கும் இளவரசர் ஹரிக்கும் மற்றும் அவரது குடும்பத்துக்கும் கிடைத்த ஒரு சந்தோசமான செய்தி” என கூறியுள்ளார்கள்.