Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் மக்கள்…. மீட்கும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட வெள்ளை மாளிகை….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை அமெரிக்கா மீட்டு வருகின்றது. இதனையடுத்து அமெரிக்க மீட்பு விமானம் அமெரிக்கர்களை மட்டுமில்லாமல் ஐரோப்பிய மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களையும் மீட்டு வருகின்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட  மக்களின் எண்ணிக்கையை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கையை இணையத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்து இன்று ஒரு நாள் மட்டுமே 10900 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 15 அமெரிக்க ராணுவ மீட்பு விமானத்தில் 6600 மக்களும் மற்றும் பிற நாடுகளின் 32 மீட்பு விமானத்தில் 4300 பேரும் வெளியேற்றபட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா கடந்த 14 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானிலிருந்து மொத்தம் 48000 மக்களை வெளியேற்றியுள்ளது. இதற்கு முன்பாகவே கடந்த  ஜூலை மாத இறுதியிலிருந்து 53000 மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றியுள்ளோம்” என அறிவித்துள்ளது.

Categories

Tech |