தொடர்ந்து பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சுற்றியுள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 மாத குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வெள்ளநீரானது சில பகுதிகளில் கட்டிடங்களின் மேல்மட்டம் வரை சூழ்ந்துள்ளது.
இதனால் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிபடுகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து டென்னசி மாகாணத்தில் மூன்றாவது கட்ட அவசரநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.