Categories
உலக செய்திகள்

“அணு ஆயுத சோதனை”… வடகொரியாவை தொடர்பு கொண்ட அமெரிக்கா… பதிலளிக்காமல் மௌனம் காக்கும் வடகொரியா…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் பல முறை தொடர்பு  கொண்டாலும் வட கொரியா நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அந்த பேச்சவார்த்தை பலனளிக்கவில்லை. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நிர்வாகத்திடம் அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் கிம் ஜாங் உன்-னின் நிர்வாகம்  அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.

இதனால் அமெரிக்கா – வட கொரியா நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும்  அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் வடகொரியாவை தொடர்பு கொண்டுள்ளது . ஆனால் கிம் ஜாங் உன்- னிடமிருந்து தகுந்த பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே வடகொரியா ஜோ பைடனை அமெரிக்காவின் அதிபராக ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால் டொனல்டு டிரம்ப்  அமெரிக்காவின் அதிபராக இருந்த பொழுது வடகொரியாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போதும் கூட வடகொரியா அமெரிக்காவிற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் வடகொரியா  தொடர்பாக சில புதிய கொள்கைகளை வெளியிட இருப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த புதிய  கொள்கைகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |