Categories
உலக செய்திகள்

இலவச வைஃபையை பயன்படுத்த வேண்டுமா….? புதிரை கண்டுபிடியுங்கள்…. உணவகத்தின் சவால்….!!

இலவசமாக வைஃபையை பயன்படுத்த வேண்டுமானால் புதிரை கண்டுபிடிக்க வேண்டும்  என ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது.

உலகம் முழுவதுமே இன்று டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் இணையதளம் இல்லாமல் எதுவுமே முடியாது என்ற நிலையும் உருவாகியுள்ளது. அதாவது சாப்பிடுவதில் தொடங்கி காய்கறி வாங்கும் வரை அனைத்துமே இணையதளம் மூலம்தான் நடைபெறுகின்றது. இந்த இணையதளத்தை பயன்படுத்துவதற்கு இலவசமாக வைஃபை கிடைக்கும் என்றால் நமக்கு வேறென்ன சந்தோசம் வேண்டும். இதனையடுத்து உணவகங்கள் மற்றும் மக்கள் செல்கின்ற பல வணிக இடங்கள் இலவசமாக வைஃபையை தருகின்றது. ஆனால் இலவசமாக வைஃபையை தரும் பெரிய ரெஸ்டாரெண்ட் ஒன்று பாஸ்வேர்டை கண்டுபிடிக்க ஒரு நூதன புதிர் ஒன்றை வைத்துள்ளது. அதாவது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆண்டோரியோ என்னும் பகுதி அமைந்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள யாயாஸ் தாய் ரெஸ்டாரெண்ட்டில் இலவச வைஃபை சேவை உள்ளது. அந்த ரெஸ்டாரெண்டுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள வைஃபை பயன்படுத்திக் கொள்வதற்காக பாஸ்வேர்டை அவர்கள் சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பாஸ்வேர்டு நேரடியானது கிடையாது. அதில் தான் ஒரு புதிர் உள்ளது. இந்த புதிரை கணித மேதைகளால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும் என்ற சவாலையும் ரெஸ்டாரெண்ட் வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த சுவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள புதிரின் விடைதான் வைஃபை பாஸ்வேர்ட் ஆகும். மேலும் நம்மால் இந்தக் கணித வினாவுக்கு விடை கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே அந்த இணையத்தை பயன்படுத்த முடியும்.

இதனைத்தொடர்ந்து அந்தப் பெரிய ரெஸ்டாரெண்டுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு வைஃபையை பயன்படுத்துவதை காட்டிலும் தான் ஒரு கணிதமேதை என்பதை நிரூபிப்பதற்காக அங்கு சென்று பலரும் பாஸ்வேர்டை கண்டுபிடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் இந்த ரெஸ்டாரென்ட் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பலரையும் இந்த ரெஸ்டாரெண்ட் கவர்ந்து வருகின்றது. அதன்பின் கணிதத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள் இந்த ரெஸ்டாரெண்ட்டின் இலவச வைஃபையை பயன்படுத்த முடியாது.

Categories

Tech |