Categories
உலக செய்திகள்

மக்களே உஷார் : 97% இறப்பு….. குடிநீரில் மூளையை தின்னும் அமீபா….. 6 வயது சிறுவன் மரணம்….!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மூளையை சாப்பிடும் அமீபா தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிரசேரியா கவுண்டி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் மூளையை சாப்பிடும் நெக்லேரியா ஃபவுலேரி என்ற அமீபாவால்  கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தான். முதலில் உயிரிழந்த சிறுவனின்  வீட்டில் இருந்த குழாய்களிலும், பின்பு நகரின் மையத்தில் இருந்த செயற்கை நீரூற்று உள்ளிட்ட இடங்களிலும் அமீபா இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து,

அப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமான ஜாக்சன் ஏரியை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும்  தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒற்றை செல் நுண்ணுயிரியான நெக்லேரியா ஃபவுலேரி அமீபா நன்னீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது. மூக்கின் வழியாக மனித உடலுக்குள் செல்லும் இந்த அமீபா  நேரடியாக மூளைக்குச் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்தி விடும். அமீபா தாக்கினால் 97% உயிரிழப்பு ஏற்படும் என்பதால், பிரசேரியா கவுண்டி பகுதியை பேரிடர் பகுதியாக டெக்சாஸ் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். 

Categories

Tech |