அமீரகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமீரகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளரான டாக்டர் பரிதா அல் ஹொசனி கூறுகையில், ” அமீரகத்தில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா பாதிப்பிற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பின சார்ந்த மக்களுமே காரணம். இந்த பாதிப்பினை தடுப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒரு சில மக்கள் முக கவசம் அணியாமலும், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அணியாமலும் இருக்கின்றனர். அவர்களில் எவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.
அது மட்டுமன்றி குடும்ப உறவினர்களை சந்திப்பது மற்றும் அவர்களுடன் கைகளை ஒருவருக்கொருவர் குறுக்கிக் கொள்வது போன்ற செயல்களை செய்கின்றனர். அதனால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 20 வயது முதல் 40 வயதுடைய இளைஞர்களுக்கு மத்தியில் அதிகமாக தென்படுகிறது. அவர்களின் தவறான செயல்களால் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.