உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகத்திற்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமித்ஷா வருகை தர இருக்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க இருக்கிறார். அவருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வருகின்ற 11 ஆம் தேதி சென்னையில் நடைபெறஇருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருவது உறுதியானது.
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மாநிலங்களவையிலும், மக்களவையிலும் முன்னெடுத்து பேசிய அமித்ஷாவின் வருகையை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் தேர்தல் முடிந்து உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.