Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து” ஓவைசி MP_க்கு பதிலடி கொடுத்த அமித்ஷா…!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் ஓவைசி MP_க்கு அமித்ஷா பதிலடி பதில் கொடுத்துள்ளார்.

இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான மசோதா மீதான  விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அதில் பேசிய  மக்களவை உறுப்பினர் ஓவைசி  கூறும் போது மத்திய அரசின் இந்த மசோதாவை விமர்சித்து பேசினார். அப்போது , இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்.  பாஜக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி , அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டது வரலாற்று பிழையை செய்யப்போகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

மக்களவை உறுப்பினர் ஓவைசி_யின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில் , வரலாற்று பிழையை செய்யப்போகிறோம் என்று  ஓவைசி கூறுகிறார். ஆனால் நாங்கள் தவறு செய்யப்போவதில்லை. நாங்கள் ஏற்கனவே செய்துள்ள தவறை சரிசெய்ய போகின்றோம். இன்னும் 5 ஆண்டுகளில் நீங்கள் காஷ்மீரின்  வளர்ச்சியை பார்க்க போகிறீர்கள். பிரிவு 370 அவர்களுக்கு என்ன செய்தது என்று அங்குள்ள மக்கள் உணர்வார்கள் என்று பதிலடி கொடுத்தார்.

Categories

Tech |