டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மார்ச் 11ம் தேதி நடைபெறும் விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பதிலளிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மக்களவையில் நேற்று சபாநாயகர் இருக்கைக்கு சென்று பேப்பர்களை பறித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல இன்று அவை கூடியதும் டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக கோரி எதிர்கட்சியினர் அ தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து 5வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் முடங்கியுள்ளது. நாடாளுமன்றம் ஹோலி விடுமுறைக்கு பிறகு வரும் மாரச் 1-ம் தேதி மீண்டும் கூடுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று மாரச் 1-ம் தேதி டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். மேலும் விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பதிலளிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.