இன்று மாலை கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிடுகின்றார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.
மாலை நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட இடுகின்றார். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகின்றது. இந்த மழையால் உயிரிழப்பு மற்றும் சேதாரங்கள் ஏற்றப்பட்டுள்ளன. இதுகுறித்தும் இன்று அமித்ஷா கேட்டறிகின்றார்.