மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லாததால் அவரை விரைவில் மாற்றுவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசியல் விமர்சகரான காந்தராஜ் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் முடிந்து விட்டது. அவர் என்னவெல்லாம் உளர வேண்டுமோ அத்தனையும் உளறிவிட்டார்.
இனி புதிதாக ஒருவரை நியமித்து அவரையும் உளர வைப்பார்கள். அண்ணாமலையை போன்று முடிந்தவரை அவரும் சிறிது காலம் கொந்தளிப்பார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக அமித்ஷா கூறி வருகிறார். வருகிற தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி இருப்பது மேலிடத்திற்கு நன்றாக தெரியும் என்பதால் அண்ணாமலையை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.